ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 35 விமானப்படை வீரர்கள் உள்பட 90 பேர் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனைகள் வழி உறுதியானதை அடுத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக விமானப்படைத் தளம் மூடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப் புளியில் கடற்படைக்குச் சொந்தமான பருந்து என்ற விமானப்படைத் தளம் உள்ளது. இந்த தளத்தில் பணியாற்றும் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த 41 வீரர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனை செய்ததில் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, விமானப்படைத் தளத்தில் கிருமிநாசினி தெளிக்கப் பட்டு, கொரோனா பாதிப்புக்குள்ளா னவர்கள் மருத்துவமனையில் சிகிச் சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 90 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்ந்து உள்ளது.
இம்மாவட்டத்தில் இதுவரை 301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் கிருமி பரவுவதைத் தடுக்கும் வகை யில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு 'இ-பாஸ்' அனுமதி அவசியம் தேவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இம்மாநிலத்தில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. 866 பேர் உயிரிழந் துள்ளனர். 37,763 பேர் குணமடைந்து உள்ளனர்.
சென்னையில் மொத்த பாதிப்பு 45,814 பேராக உள்ள நிலையில், 18,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 26,472 பேர் குணமடைந்து உள்ளனர். 668 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

