சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரம், இரண்டாயிரம் என தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இருப்பினும், இந்த நோய்த்தொற் றில் இருந்து குணமடைவோரின் விகிதம் பாதிக்கப்படுவோரின் விகிதத்தை விடவும் அதிகமாகிக் கொண்டே வருவது மனதிற்கு ஆறுதலைத் தருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா கிருமித் தாக்கம் தமிழகத்திலும் சென்னையிலும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டா லும் உண்மையில் சென்னையில் அதிகரிக்கவில்லை என்று மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வரை தினமும் 50க்கும் குறைவானவர்களே இத்தொற்றால் பலியாகி வருகின்ற னர். தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் குணமாகி வரு வோர் எண்ணிக்கையும் அதிக ரித்துக்கொண்டே வருகிறது. இது வரை சுமார் 40,000 பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.
இந்நிலையில், "பாதிப்பு அதிகரிப்பை விடுங்கள். குணமடைந் தவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு விழுக்காட்டையும் பாருங்கள்," என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவ்வகையில் வியாழன் அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,509 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது பாதிப்பு எண்ணிக்கை 3,500 ஆக இருந்தாலும் குண மடைந்தோரின் எண்ணிக்கை 60%ஐ தாண்டியுள்ளது. இது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 70,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 40,000 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
உயிர்ச்சேதம் குறைந்துள்ளது
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறிய முதல்வர் பழனிசாமி, அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.வல்லரசு நாடுகளே கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்பைத் தடுக்க முடியாமல் தடுமாறும்போது கொரோனாவைத் தடுப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். சேலம், கோவையை அடுத்து திருச்சியில் நேற்று காலை ஆலோசனை நடத்தியபோது அவர் இதைக் கூறினார்.

