சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு நாளும் பாதிப்பும் பலியும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை மண்டலம் வாரியாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
நேற்று 26ஆம் ேததி காலை நிலவரப்படி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ைனயில் உள்ள 5 மண்டலங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ராயபுரத்தில் 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது மாநகர மக்களிடையே பதற்றத்தை ஏற் படுத்தி உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 6,951 பேரும் தண்டையார்பேட்டையில் 5,717 பேரும் அண்ணா நகரில் 5,260 பேரும் தேனாம் பேட்டையில் 5,534 பேரும் கோடம்பாக்கத்தில் 5,216 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நேற்று கிருமிப் பரவலால் பாதிப்பு அடைந்த 3,509 பேரில் 1,834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களையும் சேர்த்து சென்னையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

