சீனாதான் அத்துமீறியது: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

சீனாதான் அத்துமீறியது: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

2 mins read
51af1323-f6ea-48ed-a58b-e404824df199
லே மலைப் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்தஇந்தியவீரர்கள். படம்: ஊடகம் -

புது­டெல்லி: இரு நாடு­க­ளுக்கு இடையே கையெ­ழுத்­தான அனைத்து ஒப்­பந்­தங்­க­ளை­யும் சீனா அப்­பட்­ட­மாக மீறி­யுள்­ளது என மத்­திய வெளி­யு­ற­வுத் துறை குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை செய்­தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவஸ்­தவா லடாக்­கின் கல்­வான் பள்­ளத்­தாக்கு இந்­தி­யா­வின் ஒருங்­கி­ணைந்த பகுதி என்று திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டார்.

அப்­ப­கு­தி­யில் இந்­திய வீரர்­கள் பல ஆண்­டு­க­ளாக சுற்­றுக்­கா­வல் துறை­யில் ஈடு­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், கடந்த மே மாதத் தொடக்­கத்­தி­லேயே கிழக்கு லடாக் பகு­தி­களில் சீன வீரர்­கள் அத்­து­மீறி நுழைய முயன்­ற­தா­கச் சாடி­னார்.

தற்­போது நிகழ்ந்த மோத­லுக்கு சீனா­தான் கார­ணம் என்று கூறிய அனு­ராக் ஸ்ரீவஸ்­தவா, இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான ஒப்­பந்­தங்­களை மீறும் வகை­யில் சீன வீரர்­கள் செயல்­பட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யத் தரப்­பில் எல்­லைக்­கோட்டை மாற்­று­வ­தற்கு எந்­த­வித முயற்­சி­யும் செய்­ய­வில்லை என்­றும் சீனா தரப்பு தொடர்ந்து ஒரு­தலைப்­பட்­ச­மாக செயல்­ப­டு­கிறது என்­றும் அவர் புகார் எழுப்­பி­னார். எல்­லைக் கோட்டை மாற்­று­வ­தற்கு சீனா முயற்­சிப்­ப­தா­க­வும் அவர் மேலும் சாடி­னார்.

இதற்­கி­டையே இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­யில் தொடர்ந்து பதற்­றம் நீடித்து வரு­கிறது. லடாக்­கின் லே மலைப்­ப­கு­தி­யில் இந்­திய வீரர்­கள் நேற்று முன்­தி­னம் தீவிர சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

லடாக்­கின் கல்­வான் பள்­ளத்­தாக்கு, பான்­காங் ஏரிப்­ப­குதி, ஹாட் ஸ்பி­ரிங்ஸ் உள்­ளிட்ட பகு­தி­களில் இந்­தி­யப் படை­கள் பெரு­ம­ள­வில் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே சீன வெளி­யு­ற­வுத் துறை செய்­தித் தொடர்­பா­ளர் ஜாவோ லிஜி­யன், கல்­வான் பள்­ளத்­தாக்கு சீனா­வின் ஒருங்­கி­ணைந்த பகுதி என்­றும் அங்கு இந்­திய வீரர்­கள் அத்­து­மீறி நுழைந்­த­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

வெளியுறவு அமைச்சு: கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி