வடமாநிலங்களில் மழை; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

1 mins read

புது­டெல்லி: வடமாநி­லங்­களில் பர­வ­லாக மழை பெய்து வரும் நிலை­யில் பீகா­ரி­லும் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தி­லும் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் பலி­யா­கி­யுள்­ள­னர்.

பீகா­ரில் கடந்த 3 தினங்­க­ளாக இடி­யு­டன் கூடிய கன­மழை பெய்து வரு­கிறது. மழை தொடர்­பான பல்­வேறு சம்­ப­வங்­களில் இது­வரை 83 பேர் பலி­யாகி உள்­ள­னர். ஏரா­ள­மா­னோர் காய­ம­டைந்­துள்­ள­னர். பெரிய அள­வில் சொத்­து­கள் சேத­ம­டைந்­துள்­ள­தாக அம்­மா­நி­லத்­தின் பேரி­டர் மேலாண்­மைத் துறை தெரி­வித்­துள்­ளது.

பீகா­ரில் உள்ள 23 மாவட்­டங்­களில் இடி மின்­னல் தாக்கி பலி­யா­னோ­ரின் எண்­ணிக்­கையே அதி­க­மாக உள்­ளது. அங்­குள்ள கோபால் கஞ்­சில் பகு­தி­யில் மட்­டும் அதி­க­பட்­ச­மாக 13 பேர் மின்­னல் தாக்கி பலி­யாகி உள்­ள­னர்.

இதற்­கி­டையே உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கன­ம­ழைக்கு இது­வரை 24 பேர் பலி­யாகி உள்­ள­னர். அங்கு இடி மின்­னல் தாக்­கி­ய­தில் பத்­துக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர்.

பீகா­ரில் பலி­யா­னோர் குடும்­பங்­க­ளுக்கு மாநில அரசு தலா 4 லட்­சம் ரூபாய் நிவா­ரண உதவி அளித்­துள்­ளது.

இதற்­கி­டையே ராஜஸ்­தான், இமாச்­ச­லப்­பி­ர­தே­சம், ஹரி­யானா, அரு­ணாச்­ச­லப்­பி­ர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளி­லும் பரு­வ­மழை தீவிரமடைந்து வரு­கிறது. இந்நிலையில் வட­மா­நி­லங்­களில் மேலும் இரு தினங்­க­ளுக்கு கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.