சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலிஸ் காவலில் இருந்த தந்தை யும் மகனும் அடித்துக் கொல்லப் பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"போலிஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் என்றும் நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே நம்மை அடக்க முயலுவது மோச மான பேராபத்து," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தந்தை ஜெயராஜ்- மகன் பெனிக்ஸின் குடும்பத்தி னருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நியாயம் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும் ராகுல் காந்தி தமது பதிவில் வலியுறுத்தி உள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப் பட்டதன் விளைவாகவே இறந்திருக் கிறார்கள் என்று கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302வது பிரிவின்கீழ் கொலைக் குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
"கொல்லப்பட்டவர்களுக்கு கடும் காயங்கள் இருந்தபோதிலும் அவர்களைக் காவலில் வைத்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை, மருத்துவர்கள் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக சிறைக்கு அனுப்பியது முதலானவை குறித்து ஓர் உயர்மட்ட அளவிலான விசா ரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார்.அதில், "அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காக என்பது போய், இப்போது எதற்காக சாகிறோம் என்றே தெரியாமல் இறந்துள்ளார்கள் அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலிஸ் மிருகத்தனம் என்பது ஒரு கொடூரமான குற்றம். பாதுகாவலர்களே ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்று.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
தமிழக அரசின் சார்பில் இரு உயிரை பறிகொடுத்த குடும்பத்தின ரிடம் ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். டுவிட்டரில், "ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்," என்ற பதிவு பெருகி வருகிறது. படம்: ஊடகம்

