கர்நாடகா உடுப்பியைச் சேர்ந்த ஒரே ஒரு கை உள்ள சிந்தூரி என்ற இந்த 10 வயது சிறுமி, சக மாணவ மாணவிகளுக்கு தானே முகக்கவசங்களைத் தைத்துத் தருகிறார்.
இணையத்தில் இவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்தச் சிறுமிக்குப் பிறப்பிலேயே முழங்கைக்குக் கீழே இடது கை கிடையாது. நாள் ஒன்றுக்கு 15 முகக்கவசங்களை இவர் தைக்கிறார்.
படம்: இந்திய ஊடகம்

