வியப்பு: கொரோனா மரணம் இல்லாத மாநிலங்கள்

வியப்பு: கொரோனா மரணம் இல்லாத மாநிலங்கள்

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வின் மணிப்­பூர், மிசோ­ரம், நாகாலாந்து, சிக்­கிம் மாநி­லங்­களில் கொரோனா கிருமித்தொற்று இருந்­தா­லும் இது­வரை உயி­ரி­ழப்பு இல்லை என்று மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

இந்த மாநி­லங்­களில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் மொத்­தம் 5,715 பேர் குணம் அடைந்­துள்­ள­தா­க­வும் 3,731 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மி பாதிப்பு தீவி­ர­மாக இருந்­த­போ­தும், எட்டு வட­கி­ழக்கு மாநி­லங்­களில் கொரோனா தொற்று பாதிப்பு அதி­க­ள­வில் இல்லை.

ஒட்­டு­மொத்த வட கிழக்குப் பகு­தி­யில் கொரோனா தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­கள் எண்­ணிக்கை வெறும் 12 தான். மணிப்­பூர், மிசோ­ரம், நாகாலாந்து, சிக்­கிம் ஆகிய 4 மாநி­லங்­களும் கொரோனா கிருமி உயி­ரி­ழப்­பு­களில் இருந்து இது­வரை தப்பி உள்­ளன. இது ஒரு வியப்பாகத் தெரிகிறது.

வட­கி­ழக்கு மாநி­லங்­களில் கொரோனா தொற்று சிகிச்­சைக்­கென்று பிரத்­தியேக மருத்துவமனை கள் எதுவும் இல்லை.