சென்னையில் முழு ஊரடங்கு

சென்னையில் முழு ஊரடங்கு

1 mins read
367a3691-a8c2-44c3-b9cf-150fde721654
-

சென்னை: சென்னையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு சமயத்திலும் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்கள், துணிக்கடைகள், வீட் டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் என அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.

மளிகை கடைகளும் காய்கறி, பழக்கடைகளும் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. ஊரடங்கிலும் அனுமதிக்கப்பட்ட காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றுக்கும் இன்று ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதால் இயங்கவில்லை. ஆனால் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசியமான இடங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. மேலும் எல்லை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் யாரும் உள்ளேள்தை, வெளியே செல்ல முடியாதபடி இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

பழைய வண்ணாரப்பே ட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலிசார் , 500க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர் . தேவையின்றி வெளியில் நடந்து செல்லும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் .