செய்திக்கொத்து (இந்தியா) 29-6-2020

செய்திக்கொத்து (இந்தியா) 29-6-2020

2 mins read
1b4d347a-157d-4b35-af2f-c65b53a6e9a4
வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா நடவடிக்கை: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பீன்ஸ், கிர்கிஸ்தான், சுவூதி அரேபியா, பங்ளாதேஷ், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், உக்ரேன், வியட்னாம் ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூலை 3 முதல் 15ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்பட உள்ளன. படம்: ஏஎப்பி -

17 நாடுகளுக்கு 170 விமானங்கள்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான திட்டத்தின் கீழ் வரும் ஜூலை 3 முதல் 15ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பீன்ஸ், கிர்கிஸ்தான், சுவூதி அரேபியா, பங்ளாதேஷ், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், உக்ரேன், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

பாஜக எம்பிக்கு கிருமித்தொற்று

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள லம்புவா தொகுதி பாஜக எம்எல்ஏ தேவ்மானி திவேதிக்கு கொவிட்-19 நோய் இருப்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவ்மானியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாக அவரது சகோதரர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது டெல்லியில் உள்ள ஜேஎம்யு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருமித்தொற்று சமூகப் பரவலாக மாறியது: ஒப்புக்கொண்ட முதல்வர்

பானாஜி: கோவாவில் கொரோனா கிருமித்தொற்று தற்போது சமூகப் பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதாக அம்மநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக பலருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை கோவாவில் 1,039 பேருக்கு கொவிட் 19 கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் இவர்களில் 667 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.