கட்டுமானப்பணி குறித்து முதல்வர் நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தின் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப்பூங்கா அமைகிறது

முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் அனைத்துலக தரத்திலான கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒட்டுமொத்தமாக 1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,022 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தயாராகும் என்று கூறப்பட்டுள்ளது.