அனைத்து மக்களையும் பரிசோதிக்க வலியுறுத்து

சென்னை: ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி என்ற பாகு­பாடு இல்­லா­மல் எல்­லா­ரும் ஒரே அணி­யில் திரண்டு மக்­கள் நலன் காப்­ப­தற்­கா­கப் பாடு­பட வேண்­டும் என்று திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை தமி­ழ­கத்­தில் 82,275 ஆகவும் சென்னையில் 53,762-ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தொற்று அறி­குறி இருப்­ப­வர், இல்­லா­த­வர் என்ற பேதம் பார்க்­கா­மல் அனை­வ­ரை­யும் பரி­சோ­திக்­க­வேண்­டும் என்­றும் ஸ்டாலின் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில், “பரி­சோ­த­னை­களை அதி­கப்­ப­டுத்­துங்­கள். தொற்­றுள்ள பகுதிகளை மற்ற பகு­தி­யில் இருந்து தனி­யா­கப் பிரித்து, அரண் போலத் தடுத்து, அனை­வ­ரை­யும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­துங்­கள்.

“வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­படும் மக்­க­ளுக்கு மாதம் ரூ.5,000 கொடுக்க வேண்டும். மக்­க­ளைக் காக்­கும் மருத்­து­வர்­க­ளை­யும் தாதி யர்க­ளை­யும் அரசு பாதுகாக்கவேண்­டும். பரி­சோ­த­னை­களை மாவட்ட வாரி­யாக வெளி­யிட வேண்டும்,” என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா ஒழிப்புப் பணி­யில் தமி­ழக அர­சுக்கு ஆலோ­ச­னை­கள் எது­வும் கூற­வில்லை என முதல்­வர் பழ­னி­சாமி வெளி­யிட்­டி­ருந்த குற்­றச்சாட்டை திட்­ட­வட்­ட­மாக மறுத்துள்ள திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின், 50க்கும் மேற்­பட்ட தனது அறிக்­கை­களை ஒவ்­வொன்­றாகத் தொலைக்­காட்­சி­யில் எடுத்­துக்­காட்டி விளக்கமளித்தார்.

தமி­ழக மக்­களின் நலன் காக்­கப்­படும் வரை தாம் முதல்­வ­ருக்கு ெதாடர்ந்து ஆலோ­சனைகளைச் சொல்ல உள்­ள­தாகவும் ஸ்டாலின் தெரி­வித்தார்.

இதற்கிைடயே, குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர்கள் 14 நாட்களும் மருத்துவ மனைகளிலோ, பாதுகாப்பு மையங் களிலோ அல்லது அவர்களின் வீடுகளிலோ தனிமைப்படுத்தப்படு வார்கள் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!