அசாமில் கனமழை: 9 லட்சம் பேர் பாதிப்பு; 18 பேர் பலி;

கௌஹாத்தி: அசாமில் கடந்த சில தினங்களாக நீடித்துவரும் கனமழை காரணமாக 18 பேர் பலியாகி உள்ளனர்.

மழை, வெள்ளத்தால் சுமார் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மேகாலயா, பீகார், அசாம், ஆகிய 3 மாநிலங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட டுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அசாமில் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.