5.66 லட்சம் பேர் பாதிப்பு: 16,893 பேர் உயிரிழப்பு

புது­டெல்லி: திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 418 பேர் உயி­ரி­ழந்­ததை அடுத்து இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 16,893 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மேலும் திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் புதி­தாக 18,522 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்­டதை அடுத்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 5,66,840 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அதே­வே­ளை­யில் செவ்­வாய்க்­கி­ழமை காலை வரை­யி­லான நில­வ­ரப்­படி 13,099 பேர் கொவிட் 19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். இதன் ­மூலம் குண­ம­டைந்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை 3,34,821ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட் 19 நோயால் தாக்­கப்­பட்­ட­வர்­களில் இது­வரை 59 விழுக்­காட்­டி­னர் குண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் தற்­போது சுமார் 2.15 லட்­சம் பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் பள்ளி, கல்­லூ­ரி­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் மெட்ரோ ரயில் சேவை­யும் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் அதி­க­மா­னோர் கூடும் நிகழ்­வு­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சில இடங்­களில் ஊர­டங்கு சற்றே தளர்த்­தப்­பட்­டி­ருந்­தா­லும் பள்ளி, கல்­லூ­ரி­க­ளைத் திறக்க தடை நீடிப்­ப­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

திரை­ய­ரங்­கு­கள், நீச்­சல் குளங்­கள், பொழு­து­போக்கு பூங்­காக்­கள், மதுக்­கூ­டங்­கள், அரங்­கு­கள் ஆகி­ய­வை­யும் ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

நேற்று காலை நில­வ­ரப்­படி அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா தொடர்ந்து முத­லி­டத்­தில் நீடித்து வரு­கிறது. பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யில் தற்­போது சீனாவை முந்தி உள்­ளது தலை­ந­கர் டெல்லி.

மகா­ராஷ்­டி­ரா­வில் சுமார் 1.7 லட்­சம் பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு சுமார் 4,800 போலி­சா­ருக்கு கொவிட்-19 நோய் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

டெல்­லி­யில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 85 ஆயி­ரத்­தைக் கடந்­துள்ள நிலை­யில் அங்கு கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி நேற்று முன்­தி­னம் வரை சுமார் 99 ஆயி­ரம் பேருக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. இதில் 7,414 பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே உத்­த­ர­ப்பி­ர­தே­சம், மத்­தியப்பிர­தே­சம், குஜ­ராத், ராஜஸ்­தான் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

குஜ­ராத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை சுமார் 32 ஆயி­ர­மாக உள்ள நிலை­யில் உத்­த­ர­ப்பி­ர­தே­சத்­தில் இந்த எண்­ணிக்கை 23 ஆயி­ர­மா­க­வும், ராஜஸ்­தா­னில் சுமார் 18 ஆயி­ர­மா­க­வும் உள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 18 ஆயி­ர­மா­க­வும் ஹரி­யா­னா­வில் 14 ஆயி­ர­மா­க­வும் மத்­தி­ய­ப்பி­ர­தே­சத்­தில் 13 ஆயி­ர­மா­க­வும் உள்­ளது.

கொரோனா கிருமித் தொற்றியோர் எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது டெல்லி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!