தமிழகத்தில் 38,000 பேருக்கு கிருமித்தொற்று சிகிச்சை 90,000 பேர் பாதிப்பு; 50,000 பேர் குணம்

2 mins read
249eec91-3ee5-4ee4-bb14-e77a1f97d8d7
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஒரு­பக்­கம் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படும் மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலையில், மற்­றொரு பக்­கத்­தில் இத்­தொற்­றில் இருந்து குண­ம­டை­வோர் எண்ணிக்கையும் அதி­க­ரித்து வரு­வ­தால் மக்­கள் சற்றே நிம்­மதி அடைந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 50,000 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மாநிலம் எங்கும் செவ்வாய் கிழமையுடன் 24 மணி நேரத்தில் புதி­தாக 3,943 பேருக்கு இத்­தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்­ணிக்கை 90,167 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதில் வெளி­நா­டு­கள், வெளி மாநி­லங்­களில் இருந்து வந்தவர்­களும் அடங்­கு­வர்.

கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டவர்­களில் 38,889 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இருப்­பி­னும், இக்­கி­ரு­மித் தாக்­கு­த­லுக்கு இது­வரை தமி­ழ­கத்­தில் 1,201 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

இந்நிலையில், மருத்­து­வத்­துறை யின­ரின் அர்ப்பணிப்பால் மாநி­லம் முழுதும் கொவிட்-19 கிருமி பாதிப்பில் இருந்து 50,074 பேர் மீண்டுள்ளனர். சென்­னை­யில் மட்டும் இத்ெதாற்றில் இருந்து 34,828 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

மாவட்ட வாரி­யாக கொரோனா பர­வி­ய­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை பட்டியலை தமி­ழக சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ளது.

அதன்படி, அரி­ய­லூர்-462, செங்­கல்­பட்டு- 5,419, சென்னை-58,327, கோவை- 538, கட­லூர்-1,073, தர்­ம­புரி-81, திண்­டுக்­கல்-472, ஈரோடு-157, கள்­ளக்­கு­றிச்சி-850, காஞ்­சி­பு­ரம்-1,977, கன்­னி­யா­கு­மரி-368, கரூர்-140, கிருஷ்­ண­கிரி-140, மதுரை-2,557, நாகை-254, நாமக்­கல்-99, நீல­கிரி-89, பெரம்­ப­லூர்-158, புதுக்­கோட்டை-174, ராம­நா­த­பு­ரம் - 839, ராணிப்­பேட்டை-754, சேலம் - 780, சிவ­கங்கை-241, தென்­காசி-347, தஞ்­சா­வூர்-448, தேனி-702, திருப்­பத்­தூர்-172, திரு­வள்­ளூர்-3,830, திரு­வண்­ணா­மலை-1,824, திரு­வா­ரூர்-455, தூத்­துக்­குடி-943, திரு­நெல்­வேலி-796, திருப்­பூர்-180, திருச்சி- 682, வேலூர்-1,308, விழுப்­பு­ரம்-915, விரு­து­ந­கர்-493, விமா­ன­நி­லைய கண்­கா­ணிப்­பில் வெளி­நாட்­டி­னர் 385 பேரும் உள்­நாட்­டி­னர் 332 பேரும் ரயில் நிலைய கண்­காணிப்பில் 406 பேரும் என ஆக மொத்­தம் 90,167 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ளதாக அறிக்­கை விவரம் தெரி­வித்துள்­ளது.

கொரோனா கிருமி பரவாமல் தடுக்கும் வகையில், தனது முகம், உடல், தலையில் வேப்பிலைச் சாந்தை அரைத்துப் பூசியுள்ள சென்னை குடியிருப்பா

ளரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடல்நலம் குறித்து விசாரிக் கின்றனர்.

படம்:

ஏஎஃப்பி