கொரோனா தொற்றால் உயிரிழந்த பலரது உடல்களை ஒரே குழியில் வீசும் அவலம்

1 mins read
050dd17e-91ac-42ea-acd0-2f6ec017a338
கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பலரது சடலங்களை மொத்தமாக ஒரே குழியில் போட்டு அடக்கம் செயவதாக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியை வெளியிட்டு தமது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். காணொளி: திரு டி.கே. சிவகுமாரின் டுவிட்டர் பக்கம் -

கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பலரது சடலங்களை மொத்தமாக ஒரே குழியில் போட்டு அடக்கம் செய்வதாக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியை வெளியிட்டு தமது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் அந்த நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை.

கொரோனா பிரச்னையை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்த காணொளி பிரதிபலிப்பதாக விமர்சித்துள்ளார் அவர்.

மீண்டும் இதுபோல் நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்