பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சாத்தான்குளம் மக்கள் தந்தை-மகன் உயிரிழப்பு: போலிசார் ஐவர் கைது

ஏழை அழுத கண்ணீர் இறைவன் முன் நீதி கேட்கும், அது கூரிய வாளுக்குச் சமம். - சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்

சாத்­தான்­கு­ளம்: விசா­ர­ணைக் கைதி­க­ளான தந்­தை­யும் மக­னும் கோவில்­பட்டி சிறை­யில் அடுத்தடுத்து உயி­ரி­ழந்த சம்­ப­வம் தொடர் பில், ஐந்து போலி­சார் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சாத்­தான்­கு­ளம் காவல் ஆய்வா ளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்­வா­ளர்கள் ரகு கணேஷ், எஸ்.ஐ. பால கிருஷ்­ணன், தலைமை காவ­லர் முரு­கன், காவ­லர் முத்­து­ராஜ் ஆகிய ஐந்து காவ­லர்­க­ளை­யும் சிபி­சி­ஐடி போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

இந்த கைது நட­வ­டிக்கையில் இன்­னும் சிலர் சிக்கக்கூடும் என்­றும் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், போலி­சார் ஐவர் மீதும் ஐபிசி 302வது பிரி­வின்­கீழ் கொலை வழக்கு பதிவு செய்­யப்­பட்டு உள்­ள­தால், அவர்­கள் தங்­க­ளது காவல்­துறை பணியை இழக்­கும் நிலை­யும் ஏற்­பட்­டுள்­ளது.

ஐந்து காவ­லர்­களும் கைதான சம்­ப­வம் அனைத்து தரப்பு மக்­க­ளிடமும் பெரும் வர­வேற்பை பெற்­றுள்ள நிலை­யில், சாத்­தான்­குள மக்­கள் சிபி­சி­ஐடி காவல்­து­றை­யி­ன­ரின் முதற்­கட்ட கைது நட­வ­டிக்­கைக்கு நன்றி தெரி­வித்து பட்­டா­சு­களை வெடித்­துக் கொண்­டா­டி­னர்.

இதற்­கி­டையே, சாத்­தான்­கு­ளம் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்க ளுக்கு தண்­டனை பெற்­றுத்­தர வேண்­டும் என்­பதே தமி­ழக அர­சின் நிலைப்­பா­டாக உள்­ள­தாக ெதரிவித்­துள்ள சட்­டத்­துறை அமைச்­சர் சி.வி.சண்­மு­கம், “கண­வனை, ஒரு மகனை இழந்து நிற்­கும் குடும்­பத்தின் வலியை நாங்­களும் உணர்கிறோம்,” என்று கூறி­யுள்­ளார்.

இவ்­வ­ழக்­கில் தொடர்­பு­டைய அத்­தனை பேர் மீதும் நீதித்­துறை தக்க நட­வ­டிக்கை எடுக்­கும் என்று நம்­பு­வ­தாக உயிரிழந்த பென்­னிக் சின் சகோ­தரி தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, இவ்­வ­ழக்­கில் ஏற்­கெ­னவே தலைமைக் காவ­லர் ரேவதி சாட்­சி­யாக மாறிய நிலை யில், சாத்­தான்­கு­ளம் சிறப்பு உதவி ஆய்­வா­ளர் பால்­து­ரை­யும் ‘அப்­ரூவர்’ ஆகிறார் எனத் தக­வல்­கள் தெரி வித்து உள்­ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!