சென்னை: அடுத்த மிரட்டல் டெங்கி

சென்னை: தமிழ்­நாட்­டின் தலை­நகரான சென்னை கொவிட்-19 பிடி­யில் இருந்து மீண்டு வர தன்­னால் ஆன அனைத்து முயற்­சி­களை­யும் அரங்­கேற்றி வரு­கிறது.

இந்த நிலை­யில் அந்த நக­ருக்கு அடுத்த மிரட்­டல் உரு­வா­கி­விட்­ட­தாக அபாயச் சங்கு ஊதப்­பட்டு இருக்­கிறது.

மழைக்­கா­லம் தொடங்­குவதை அடுத்து டெங்­கிக் கொசுக்­கள் தலை­வி­ரித்­தா­டத் தொடங்­கி­வி­டும் என்­ப­தால் அதி­கா­ரி­கள் கொசுக்­களைத் துடைத்­தொ­ழிக்க வெளியே தெரி­யா­த­படி முயற்­சி­க­ளைத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

இப்­போது கொவிட்-19 கார­ண­மாக பெரும்­பா­லான மக்­கள் வீடு­களி­லேயே தங்கி இருக்­கி­றார்­கள் என்­ப­தால் டெங்கி கொசு பர­வல் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று சென்னை மாந­கராட்சி மூத்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள தெருக்­க­ளி­லும் வட்­டா­ரங்­க­ளி­லும் கிரு­மி­நா­சினி மருந்து தெளிப்­பது உள்­ளிட்ட சுகா­தா­ரப் பணி­களில் பிரித்­து­வி­டப்­பட்டு இருக்­கும் கொசு ஒழிப்பு ஊழி­யர்­கள், தங்­க­ளு­டைய வழக்­க­மான பணி­களில் மறு­ப­டி­யும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்று மாந­கர அதி­கா­ரி­கள் குறிப்­பிட்டு இருக்­கி­றார்­கள்.

வீட்­டுக்கு வீடு சென்று கொசு இனப்­பெ­ருக்க இடங்­க­ளைக் கண்­ட­றிந்து மருந்­த­டிப்­ப­து­தான் இந்த ஊழி­யர்­க­ளின் வழக்­க­மான வேலை. கொவிட்-19 அதி­க­ரித்து வரு­வ­தால் இந்த ஊழி­யர்­கள் இப்­போது கொரோனா தொடர்­பான பணி­களில் பிரித்­து­வி­டப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

செப்­டம்­பர் முதல் நவம்­பர் வரைப்­பட்ட கால­கட்­டத்­தில் தலை­ந­க­ரில் பொது­வாக டெங்­கிக் காய்ச்­சல் அதி­க­மாக தலை­தூக்­கும்.

டெங்கி காய்ச்­சல் அறி­கு­றி­யும் கொவிட்-19 அறி­கு­றி­யும் ஏறக்­குறைய ஒன்­றா­கவே இருக்­கும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்தனர்.

இத­னால் குழப்­பம் ஏற்­பட வாய்ப்பு உண்டு என்­றும் அவர்கள் முன்­ன­தா­கவே எச்­ச­ரித்து இருக்­கி­றார்­கள். தலைநகரில் டெங்கி ஒழிப்பு பணியும் தொடங்கிவிட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!