3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

1 mins read
2abd9eab-3cd3-4ecf-98d8-94c23629e8d1
படம்: டுவிட்டர்/ஆமைக்கரடு -

திண்டுக்கல்: தமிழகத்தில் பழனி அருகே ஆமைக்கரடு பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகளைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவை இப்பகுதியை ஆண்ட சங்ககால ஆய்வேளிா் அரசா்களின் நினைவிடங்கள் என்பது ஆய்வில் தெரியவந்தது. கல்திட்டைகளில் கிடைத்துள்ள பலகைக்கல்லில் 7க்கு 7 என்ற கணக்கில் கட்டங்களால் ஆன 49 கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

இவை பழந்தமிழரின் ஏழு பிறப்பு மற்றும் ஏழு மறு பிறப்பு நம்பிக்கையைக் குறிப்பதாக கருதலாம் என்று தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவை பற்றிய ஆய்வுகள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.