இந்தியாவில் 6.73 லட்சம்; தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பாதிப்பு ஒரே நாளில் 24,850 பேருக்கு தொற்று

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று, ஒரே நாளில் 24,850 பேரி­டம் பரவி புதிய உச்­சம் தொட்­டுள்­ளது.

நாளும் மின்­னல் வேகத்­தில் அதி­க­ரித்து வரும் இந்த கிரு­மித் தொற்­றால் இந்­தி­யா­வில் 6.73 லட்­சம் பேரும் தமி­ழ­கத்­தில் 1.07 லட்­சம் பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்ெ­தாற்று பர­வா­மல் முறி­ய­டிக்க இந்­திய நாடெங்­கும் மத்­திய, மாநில அரசு கள் அதி­க­ள­வி­லான பரி­சோ­தனை களை­யும் ஊரடங்கு விதிமுறை களை­யும் முடுக்­கி­விட்­டுள்­ளன.

இருப்­பி­னும், கிரு­மித்­தொற்று மக்­கள் மத்­தி­யில் பர­வும் வேகம் சற்­றும் குறை­யா­மல் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இது­தொ­டர்­பாக மத்­திய சுகா தாரத்­துறை அமைச்­ச­கம் வெளி யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, “இந்­தி­யா­வில் இந்­தக் கிரு­மி­யின் வேகம் இது­வரை இல்­லாத அள­வில் கடந்த 24 மணி நேரத்­தில் நேற்று காலை­ வரை 24,850 பேருக்கு பரவி புதிய உச்­சம் தொட்­டுள்­ளது.

“அதே­போல், ஒரே­நா­ளில் 613 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

“இதன்­ கா­ர­ண­மாக, இது­வரை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் 6,73,904 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 19,279 பேர் மர­ணம் அ­டைந்­துள்­ள­னர்.

“ஒரேநாளில் 14,743 பேர் குண மடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 4,09,062 பேர் குண மடைந்துள்ளனர். தற்போது 2,45,497 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

“மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்குப் பாதிப்பு உறுதியான நிலையில், மொத்தம் 2,00,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 8,671 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், 1,08,082 பேர் குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

“தமிழகத்தில் ஒரே நாளில் நேற்று காலைவரை 4,280 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இம்மாநிலத்தில் இது வரை 1,07,001 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 1,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது வரை 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

“டெல்லியில் 97,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3,004 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

“குஜராத் மாநிலத்தில் இதுவரை 35,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,926 பேர் மரணம் அடைந்துள்ளனர். உ.பி. மாநிலத்தில் 26,554 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 773 பேர் மரணம் அடைந்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!