கெஜ்ரிவால்: டெல்லியில் 70% மக்கள் குணம்

கெஜ்ரிவால்: டெல்லியில் 70% மக்கள் குணம்

1 mins read
70c5aefa-9a8a-4b7c-a78c-13808857142f
படம்: ஏஎப்பி / சர்மா -

புது­டெல்லி: டெல்­லி­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து 70% மக்­கள் மெல்ல மெல்ல குண­ம­டைந்­துள்­ள­னர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்­டர் பதி­வில், "டெல்­லி­யில் மிக­வும் குறை­வான நோயாளிகளுக்கே தற்­போது மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­படு­கிறது. பெரும்­பா­லான மக்­கள் வீடு­க­ளி­லேயே குணமடைந்து விடு­கின்­ற­னர். இன்றைய நிலையில், கொவிட்-19 நோயாளிகளுக்­கான 9,900 படுக்­கை­கள் காலி­யாக உள்­ளன. நாட்­டில் கிரு­மித்­தொற்று பாதிப்பில் மகா­ராஷ்­டி­ரா­வுக்கு அடுத்து தமி­ழ­கம் 2வது இடத்­தில் உள்­ளது. 3­வது இடத்­தில் உள்ள டெல்­லி­யில் 97,200 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ளனர். அதில் 68,256 பேர் குண­மடைந்துவிட்ட­னர். இத­னால் அங்கு குண­ம­டை­வோர் விகி­தம் 70% ஆக அதி­க­ரித்­துள்­ளது," என்று தெரி­வித்­துள்­ளார்.