கொவிட்-19 தொற்று: உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா

புது­டெல்லி: உல­க­ள­வில் அதிக அள­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் ரஷ்­யாவை முந்­திக் கொண்டு மூன்­றா­வது இடத்­துக்கு வந்­துள்­ளது இந்­தியா.இத­னால் கொவிட்-19 கிரு­மித் தொற்று பாதிப்­பில் அமெ­ரிக்கா, பிரே­சி­லுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன் றாவது இடத்­தில் உள்­ளது.

இந்­திய நாடெங்­கும் கொவிட்-19 உயிர்க்­கொல்லி கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை நாளும் மின்­னல் வேகத்­தில் அதி­க­ரித்து வரு­கிறது. இதன்­படி, இந்­தி­யா­வில் மட்­டும் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை ஏழு லட்­சத்தை நெருங்கி உள்­ளது மக்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக் கழக கொரோனா தரவு மையம் வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளின்­படி, கொவிட்-19 கிருமித்தொற்­றால் அதி­கம் பாதிப்­புக்­குள்­ளான நாடுகளின் பட்­டி­ய­லில் மூன்­றா­வது இடத்­தில் இருந்த ரஷ்­யாவை இந்­தியா முந்தி உள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ரஷ்­யா­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி இத்­தொற்­றால் 6,80,283 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். அமெ­ரிக்கா வில் 28 லட்­சம் பேரும் பிரே­சி­லில் 15 லட்­சம் பேரும் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தி­யா­வில் தொடர்ந்து மூன்றா வது நாளாக 20,000க்கும் அதிக மானோ­ருக்கு தொற்று பாதித்து உள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் நேற்­று­காலை வரை தொற்று பாதிப்பு இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்­ட­வர் களின் எண்­ணிக்கை 24,850 ஆக உயர்ந்­துள்­ளது. இவர்­க­ளை­யும் சேர்த்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 6,97,836 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இவர்­களில் 2,53,162 பேர் கிரு­மிப் பர­வ­லுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலை­யில், 4,24,891 பேர் நோய்த்­தொற்­றில் இருந்து குண மடைந்து உள்­ள­னர்.

அதே­வே­ளை­யில், இத்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்­கை­யும் 19,700 ஆக உயர்ந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் உள்ள மொத்த பாதிப்­பில் மகா­ராஷ்­டிரா, தமி­ழ­கம், டெல்லி, தெலுங்­கானா, கர்­நா­ட­கம், அசாம், பீகார் ஆகிய ஏழு மாநி­லங் களில் மட்­டுமே 78% பாதிப்­பு­கள் உள்­ளன. மீத­முள்ள 22% பாதிப்பு மற்ற மாநி­லங்­களில் உள்­ள­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் மகா­ராஷ்­டிரா மாநி­லம் கொரோனா பாதிப்­புள்ள 2,00,064 மக்­க­ளு­டன் முத­லி­டத்­தில் இருந்து வரு­கிறது. கடந்த 24 மணி நேரத்­தில் நேற்­று­காலை வரை, இங்கு 7,074 பேருக்கு தொற்று இருந்­தது உறு­தி­யா­னது. 8,671 பேர் பலி­யான நிலை­யில், 1,08,082 பேர் குண­ம­டைந்­துள்­ளனர்.

மத்­திய அரசு அறி­வித்­துள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­யல்­படி, தமிழ் நாட்­டில் 1,11,151, டெல்லி-99,444, குஜ­ராத் 36,037, உத்­தர பிர­தே­சம்- 27,707, மேற்­கு­வங்­கா­ளம்-22,126, தெலுங்­கானா 23,902, ராஜஸ்­தான் 20,164, மத்­திய பிர­தே­சம்-14,930, கர்­நா­டகா-23,474, ஹரி­யானா-17,005 பேரும் கிரு­மித்­தொற்­றால் அதி­கள வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!