கேரளாவில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாவிடில் ஈராண்டு சிறை

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளத் தலை­ந­கர் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் கொரோனா பாதிப்­பைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நேற்று காலை 6 மணி முதல் ஒரு­வார காலத்­திற்கு முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக திரு­வ­னந்­த­பு­ரம் மாந­க­ராட்சி திடீர் அறி­விப்பை வெளி­யிட்­டது.

இதை­ய­டுத்து, தலை­மைச் செய லகம் மூடப்­பட்­ட­தால் முதல்­வ­ரின் குடி­யி­ருப்­பி­லேயே முதல்­வ­ரின் அலு­வ­ல­கம் செயல்­பட்­டது.

இது­போல நீதி­மன்­றங்­கள், அரசு அலு­வ­ல­கங்­கள், அர­சுப் பேருந்­து­கள் இயங்­க­வில்லை. அவ­சர, அத்­தியா வசி­யத் தேவை­க­ளைத் தவிர பொது­மக்­கள் வெளி­யில் நட­மாட வும் தடை விதிக்­கப்­பட்­டது.

கேர­ளா­வில் தொற்று பாதித்­தோர் எண்­ணிக்கை 5,429 ஆக­வும் பலி­யா­னோர் எண்­ணிக்கை 25 ஆக­வும் உள்­ளது. 3,048 பேர் குணம் அடைந்­துள்­ள­னர். 2,131 பேர் பல்­வேறு மருத்­து­வ­மனைகளி­லும் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, இந்த தொற்று சமூ­கப் பர­வல் நிலையை நெருங்கி விட்­ட­தாக கேரள அரசு வெளிப்­படை யாக அறி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து, கேர­ளா­வில் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது, தனி­ம­னித இடை­வெளி யைப் பின்­பற்­று­வ­தைக் கடைப் பிடிக்­கா­வி­டில் இரு ஆண்­டு­கள் சிறைத்­தண்­ட­னை­யும் ரூ.10,000 அப­ரா­த­மும் விதிக்­கும் வகை­யில் அதி­ர­டி­யாக அவ­சர சட்­டம் ஒன்­றைக் கேரள அரசு கொண்டு வந்­துள்­ளது.

இந்­தச் சட்­டத்­தின்­படி, திரு­மண விழாக்­களில் 50 பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­படு வர். துக்க நிகழ்­வில் 20 பேர் மட்­டுமே பங்­கேற்க இய­லும்.

இந்த அவ­சர சட்­டம் ஒரு ஆண்டுக்கு அல்­லது புதிய உத்­த­ரவு வரும் வரை­யில் நடைமுறை­யில் இருக்­கும். இந்த திருத்­தங்­களில் எதை மீறி­னா­லும் அவர் களுக்கு 2 ஆண்­டு­கள் சிறைத்­தண்­ட­னை­யும் ரூ.10,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!