சீன முதலீடுகள் மீது பிடியை இறுக்குகிறது இந்திய அரசு

புது­டெல்லி: இந்­தி­யா­வின் அன்­னிய முத­லீ­டு­கள் மீதான புதிய கண்­காணிப்­புக் கொள்­கை­களை அடுத்து சீன நிறு­வ­னங்­க­ளின் 50 புதிய முத­லீடுகள் குறித்த முன்­மொழி­வு­களை மத்­திய அரசு தீவிர ஆய்வு செய்து வரு­வ­தாக அர­சுக்கு நெருங்­கிய வட்­டா­ரங்­கள் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­துள்­ள­ன.

லடாக்­கின் கல்­வான் பள்­ளத்­தாக்­கில் சீன வீரர்­க­ளு­டன் ஏற்­பட்ட மோத­லில் இந்­திய வீரர்­கள் கொல்­லப்­பட்­டதை எதிர்த்து இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­களில் போராட்­டங்­கள் வெடித்தன. சீனப்­பொ­ருட்­க­ளுக்கு எதிர்ப்பு வலுத்து வரு­கிறது. இருப்­பி­னும் இந்­தி­யா­வில் பயன்­ப­டுத்­தப்­படும் பொருட்­களில் முக்­கால்­வாசி சீனத் தயா­ரிப்­பாக உள்­ளன.

இந்­தி­யச் சந்­தை­யில் விற்­பனை செய்­யப்­படும் திறன்­பே­சி­களில் ஓப்போ, சியோமி போன்ற சீனத் தயா­ரிப்­பு­களே அதி­க­மாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதற்­குக் கார­ணம், வசதி குறைந்­த­வர்­களும் வாங்­கிப் பயன்­ப­டுத்­தும் வகை­யில் குறைந்த விலை­யில் கவர்ந்­தி­ழுக்­கும் வடி­வ­மைப்­பைக் கொண்­டுள்­ளன சீனத் திறன்­பே­சி­கள்.

இந்­நி­லை­யில் 4ஜி தொழில்­நுட்­பத்­திற்கு சீன சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்­து­மாறு இந்­தி­யத் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அத்­து­டன் இந்­தி­யா­வின் ‘கெய்ட்’ என்­ற­ழைக்­கப்­படும் அனைத்­திந்­திய வர்த்­த­கர்­கள் கூட்­ட­மைப்பு சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் 500 வகை­யான பொருட்­க­ளைப் புறக்­க­ணிக்­கப் போவ­தாக கடந்த மாதம் அறி­வித்­தது.

‘இந்­தி­யப் பொருட்­கள் எங்­கள் பெருமை’ என்ற புதிய பிர­சா­ரத்­தை­யும் அந்த அமைப்பு தொடங்­கி­யது.

சீனப் பொருட்­களை அதிக அள­வில் புழக்­கத்­தில் கொண்­டுள்ள இந்­தியா, சீனா­வின் மிகப்­பெ­ரிய வர்த்தகப் பங்­கா­ளி­யாக உள்­ளது.

இந்­நி­லை­யில் கடந்த ஏப்­ரல் மாதத்­தில் இந்­தியா, தன் அண்டை நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளின் முத­லீ­டு­கள் குறித்து புதிய விதி­மு­றை­களை அறி­வித்­தது. அதன்­படி அம்­மு­த­லீ­டு­கள் பரி­சீ­லிக்­கப்­படும் என்று தெரி­கிறது.

இந்­தப் புதிய விதி­மு­றை­க­ளின்­படி மத்­திய அர­சின் ஒப்­பு­த­லு­டன் தான் முத­லீ­டு­கள், கூடுதல் நிதி முதலீடுகள் அனு­ம­திக்­கப்­படும்.

பெரி­ய­ள­வில் முத­லீடு செய்­யும் சீன முத­லீட்­டா­ளர்­கள் இந்­தி­யா­வின் புதிய கட்­டுப்­பாடு குறித்து கவலை தெரி­வித்­துள்­ள­தோடு சீன நிறு­வ­னங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்தி இந்­தியா பாகு­பாடு காட்­டு­வ­தா­கக் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக ந‌ஷ்­டத்தை எதிர்­நோக்­கும் நிறு­வ­னங்­க­ளைக் கைய­கப்­படுத்த சீன நிறு­வ­னங்­கள் முயற்சி செய்­ய­லாம் என்­ப­தால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்த புதிய விதி­மு­றை­கள் கொண்டு வரப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மேலும் எல்­லைப்­பி­ரச்­சி­னை­யால் சீனா­வு­ட­னான தொழில்­ரீ­தி­யான தொடர்­பு­களை இந்­தியா கொஞ்­சம் கொஞ்­ச­மாகத் துண்­டித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சீன முத­லீட்­டா­ளர்கள் முத­லீட்டு முன்­மொ­ழி­வு­க­ளு­டன் ஏறக்­கு­றைய 50 விண்­ணப்­பங்­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்தியாவில் சீன முத­லீ­டு­கள் 26 பில்­லி­யன் டாலர்­க­ளுக்­கும் மேல் இருக்­கும் என்று ஆய்வு நிறு­வ­ன­மான புரூக்ஸ் கடந்த மார்ச்­சில் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!