கொரோனா உயிரிழப்பு 20,000ஐ தாண்டியது

கொரோனா உயிரிழப்பு 20,000ஐ தாண்டியது

1 mins read
043b7731-d7cb-487d-b845-63576759f6d6
மும்பையின் மல்வானிப் பகுதியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் கிருமி நாசினி மருந்தடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நலத்துறை ஊழியர்கள்.படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் வேக­மாக பரவி வரும் கொரோனா தொற்­றுக்­குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை

20 ஆயி­ரத்தை தாண்டி உள்­ளது. மத்­திய சுகா­தா­ரத்­துறை நேற்று வெளி­யிட்ட தக­வ­லின்­படி இந்­தி­யா­வில் இது­வரை 7,19,665 பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த 24 மணி நேரத்­தில் 22,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 467 பேர் மர­ணம் அடைந்­துள்­ள­னர். இதன்­மூ­லம் கொரோனா கிருமித்தொற்றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 20,160 ஆக உயர்ந்­துள்­ளது. உயி­ரி­ழப்பு விகி­தம் 2.8% ஆக உள்­ளது.