இந்தியாவில் பாதிப்பு குறைவு: மத்திய அரசு விளக்கம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 7.5 லட்­சத்தை நெருங்கி உள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழமை ஒரே நாளில் நாடு முழு­வ­தும் 22,752 பேர் புதி­தாக நோய்த்­தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

எண்­ணிக்கை பெரி­தா­கத் தெரிந்­த­போ­தி­லும் உல­க­ள­வில் ஒப்­பி­டும்­போது இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மி­யின் பாதிப்பு மிகக் குறைவு என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பான ஒப்­பீட்­டுத் தர­வு­க­ளை­யும் மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

“உல­க­ள­வில் 10 லட்­சம் பேரில் சரா­ச­ரி­யாக 1,453 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உள்­ளது. ஆனால், இந்­தி­யா­வில் இந்த எண்­ணிக்கை 505ஆக மட்­டுமே உள்­ளது,” என மத்­திய அரசு சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.

சிலி நாட்­டில் 10 லட்­சம் பேருக்கு 14,459 பேர் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். பெரு­வில் இந்த எண்­ணிக்கை 9,070 ஆக­வும் அமெ­ரிக்­கா­வில் 8,560 ஆக­வும் பிரே­சி­லில் 7,419ஆக­வும் உள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழப்­போ­ரின் எண்­ணிக்கை 20 ஆயி­ரத்­தைக் கடந்­து­விட்­டா­லும் உலக நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்­தி­யா­வில் இறப்பு விகி­தம் குறை­வு­தான் என்­றும் அந்த அமைச்சு அறிக்­கை­யில் மேலும் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது உல­க­ள­வில் கொரோனா இறப்பு விகி­தம் 10 லட்­சம் பேரில் 68 ஆக உள்ள நிலை­யில் இந்­தி­யா­வில் 14 பேர் மட்­டுமே உயி­ரி­ழக்­கின்­ற­னர்.

புதன்­கி­ழமை காலை சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி நாடு முழு­வ­தும் மேலும் 482 பேர் பலி­யான நிலை­யில் ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 20,642 ஆக அதி­க­ரித்­துள்­ளது. நாடு முழு­வ­தும் 2,64,994 பேர் கொவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை 4,56,830 பேர் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

புதன்­கி­ழமை காலை நில­வ­ரப்­படி தெலுங்­கானா, கர்­நா­ட­கா­வில் கொரோனா பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் மிக விரை­வில் அவை அபா­ய­க­ர­மான பகு­தி­கள் என்ற நிலையை எட்­டிப்­பி­டிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. தெலுங்­கா­னா­வில் புதிய பாதிப்­புச் சம்­ப­வங்­கள் 9 நாட்­களில் இரட்­டிப்­பாகி உள்­ளன.

அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தெலுங்­கானா 6ஆம் இடத்­தைப் பிடித்­துள்­ளது. இப்­பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா, தமிழ்­நாடு, டெல்லி, குஜ­ராத், உத்­த­ரப்­பி­ர­தே­சம் ஆகி­யவை முதல் 5 இடங்­களில் உள்­ளன.

மும்­பை­யில் இது­வரை சுமார் 86 ஆயி­ரம் பேர் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஐந்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்து விட்டனர். 23 ஆயி­ரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

கொரோனா: சுமார் 7.5 லட்சம் பேர் பாதிப்பு; 20,642 பேர் உயிரிழப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!