8 போலிசாரைக் கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது

போபால்: உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம், கான்­பூ­ரில் எட்டு காவ­லர்­க­ளைக் சுட்­டுக்­கொன்­று­விட்டு, தப்­பி­யோ­டிய பிர­பல ரவுடி விகாஸ் துபேயை நேற்று காலை மத்­தி­யப்­பி­ர­தேச போலி­சார் கைது செய்­த­னர்.

தேடப்­படும் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த விகாஸ் துபே­யைப் பிடித்­துக் கொடுப்­ப­வர் களுக்கு ரூ.2.5 லட்­சம் சன்­மா­னம் வழங்­கப்­படும் என்­றும் போலி­சார் அறி­விப்பு வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

விகாஸ் துபே கைதான தக­வலை மத்­தி­யப் பிர­தேச மாநில உள்­துறை அமைச்­சர் நரோத்­தம் மிஸ்­ரா­வும் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

மத்­தி­யப்­பி­ர­தேச மாநி­லம், உஜ்­ஜைன் நக­ரின் பிர­பல மஹா கால­பை­ர­வர் கோயி­லுக்­குள் நுழைய முயன்­ற­போது விகாஸ் துபே கைது செய்­யப்­பட்­ட­தாக அம்­மா­வட்ட ஆட்­சி­யர் ஆஷிஷ் சிங்கும் உறுதி செய்­துள்­ளார்.

இது­கு­றித்து ஆஷிஷ் சிங் கூறும்­போது, “உபி போலி­சா­ரால் தேடப்­பட்டு வந்த விகாஸ் துபே நேற்று காலை மஹா கால­பை­ர­வர் கோயி­லுக்கு வந்­தார். அங்­கி­ருந்த கோயி­லின் பாது­கா­வ­லர்­கள் அவரை அடை­யா­ளம் கண்டு போலி­சுக்கு தக­வல் அளித்­த­தைத் தொடர்ந்து துபே கைதானார்,” என்றார்.

ஆனால், மஹா கால­பை­ர­வர் கோயி­லுக்கு தான் செல்­லப்­போ­வ­தாக விகாஸ் துபேவே முன்னதாக காவல்துறைக்கு தக­வல் கொடுத்­த­தா­க­வும் மற்­ற சில ஊட­கத் தக­வல்களும் குறிப்பிட்டுள்ளன.

60க்கும் மேற்­பட்ட கொலை, கொள்ளை, கடத்­தல் வழக்­கு­களில் ரவுடி விகாஸ் துபேவுக்கு சம்­பந்­தம் இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இவரை ஒரு கொலை வழக்­கின் தொடர்­பில் கைது செய்ய உத்­த­ரப் பிர­தேச போலி­சார், கான்­பூ­ரின் பிக்ரு கிரா­மத்­தில் உள்ள விகாஸ் துபேயின் வீட்­டுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி சென்­ற­னர்.

அப்போது, விகாஸ் துபே தனது கூட்­டா­ளி­க­ளு­டன் சேர்ந்து துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தில் எட்டு போலி­சார் உயி­ரி­ழந்­த­னர்.

ஒரு துணை போலிஸ் கண் காணிப்­பா­ளர், மூன்று துணை போலிஸ் அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட எட்டு பேரும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ழந்­த­னர். அத்­து­டன், ஆறு போலி­சார் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு பிறகு கான்­பூ­ரில் இருந்து தப்பி ஓடிய விகாஸ் துபேயை உத்­த­ரப் பிர­தே­சம், ஹரி­யானா மாநி­லங்­களில் போலி­சார் தீவி­ர­மா­கத் தேடத் தொடங்கினர்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் காலை விகாஸ் துபே­யின் முக்கிய கூட்­டா­ளி­க­ளான அமர் துபே, பஹுவா துபே ஆகிய இருவ­ரும் போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!