ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி பூங்கா

புதுடெல்லி: மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சூரிய மின் உற்பத்திப் பூங்காவை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இது ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி திட்டம் என்றும் சுமார் 1500 ஹெக்டேர் பரப்பளவில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.