சீனப் படைகள் வெளியேறின

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லையோரமாக உள்ள கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளிலிருந்து சீனப் படைகள் வெளியேறி உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

கடந்த திங்கட்கிழமை இந்திய-சீனப் படைகள் மோதிய கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ரோந்து முனையம் 14லிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனப் படைகள் பின்வாங்கியுள்ளன. இங்குதான் இந்திய-சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 15ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். இதன் காரணமாக லடாக் எல்லையில் தொடா்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிைடயே எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும் அதிகாரிகள் இடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அவற்றில் ஓரளவு சுமுகத் தீா்வு எட்டப்பட்டது. ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற சீன ராணுவம் ஒப்புக்கொண்டது. எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைக்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.