மருத்துவமனைகள் ஏற்க மறுத்த கொரோனா நோயாளி மரணம்

1 mins read
3ce279c1-cf85-475c-a531-5137b2fe3a73
-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளியான தனது மகனை மூன்று மருத்துவமனைகள் ஏற்க மறுத்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நான்காவது மருத்துவமனையான கோல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அந்த 18 வயது இளையரை சேர்க்க மறுத்தபோது தாம் தற்கொலை செய்யப்போவதாக அவனது தாயார் அந்த மருத்துவமனைப் பணியாளரை மிரட்டியபோதுதான் அவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒப்புக்கொண்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நட்த்தப்படும் என்று மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்தது. இந்த அறிவிப்பால் சற்றும் அமைதி அடையாத அவனது பெற்றோர் தனது மகனுக்கு முன்னதாகவே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவன் உயிர் பிழைத்திருக்கலாம் என்றனர்.