பிரதமருக்கு மோடி வாழ்த்து

சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் லீ சியன் லூங்கிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வெற்றி பெற்றதற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக மோடி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தையும் சமூக ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

நாட்டின் பிற மாநிலங்களும் டெல்லியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.