சுடச் சுடச் செய்திகள்

சிறையிலிருந்து வெளியேற விரும்பாத சசிகலா

சென்னை: தண்­டனைக் காலத்தை முறைப்­படி அனு­ப­வித்து விடு­த­லைக்­கான தகு­தியை சசி­கலா (படம்) அடைந்­து­விட்­ட­தா­க­வும் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக விடு­த­லை­யாகி வெளியே வர அவர் விரும்­ப­வில்லை என்­றும் தமி­ழ­கத்­தின் வார ஏடு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

சசி­கலா தரப்­பி­ன­ரு­டன் தொடர்புகொண்டு சேக­ரித்த தக­வல்­களை அந்த ஏட்­டின் செய்­தி­யா­ளர் விவ­ரித்­துள்­ளார்.

“தண்­டனைக் காலத்தை அனு­ப­வித்து முடித்து விடு­த­லை­யாகி வெளியே வரு­வ­தற்­கான தகு­தியை அடைந்­து­விட்­டார். ஆனால், சில கட்­சி­கள் பாஜக உத­வி­யு­டன் சீக்­கி­ரம் வெளியே வரு­வ­தா­கத் தவ­றான தக­வல்­களை கிளப்­பி­வி­டு­கின்­றன.

“தொடக்­கத்­தில் சிறை­யில் இருந்த நாட்­கள், தண்­டனை அனு­ப­வித்து முடித்த நாட்­கள் மற்­றும் சிறை விதி­க­ளின்­படி கிடைக்­கும் நன்­ன­டத்­தைக்­காக கழிக்­கப்­படும் நாள்­கள் இவை­யெல்­லாம் சேர்த்து 4 ஆண்­டு­க­ளுக்­கான தண்­டனை முடிந்­து­விட்­டது.

“இதை­ய­டுத்து, சசி­கலா வெளியே வரு­வ­தற்­கான பணி­கள் தொடங்­கி­விட்­டது. அப­ரா­தத் தொகை ரூ.10 கோடியை செலுத்த வேண்­டும். அதற்­கான பணி­களும் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால், கொரோனா பர­வு­தல், பொதுப் போக்­கு­வ­ரத்து முடக்­கம் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் இப்­போது வெளியே வரு­வதை அவர் விரும்­ப­வில்லை. இப்­போது வந்­தால் பெரிய அள­வில் தமது செல்­வாக்கை காட்ட முடி­யாது. அத்­து­டன் வீட்­டி­லேயே அடைப்­பட்டு கிடக்க வேண்­டும். கட்­சிப் பணி­கள் எதை­யும் பார்க்கமுடி­யாது. யாரை­யும் சந்­திக்க முடி­யாது. தன்­னைப் பார்ப்­ப­தற்­கும் யாரும் வர­மு­டி­யாது.

“இது­போன்ற கார­ணங்­க­ளால் சிறை­யி­லி­ருந்து வெளியே வந்­தது ஒரு செய்­தி­யாக மட்­டுமே இருக்­கும்; பெரிய மாற்­றத்தை உண்­டாக்­காது என நினைக்­கி­றார் சசி­கலா.

“தவிர, `இதற்­கா­கவா இவ்­வ­ளவு கஷ்­டப்­பட்­டோம்... நான்கு ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­தோம். நம்மை விட்­டுச் சென்ற அனைத்­தும் நம் கைக்கு கிடைக்க வேண்­டும். ஆட்சி அதி­கா­ரத்தை நாம் கைப்பற்ற வேண்­டும். அதற்கு நான் வெளியே வரு­வது மாற்­றத்தை உண்­டாக்­கு­வ­து­டன் பெரிய பர­ப­ரப்­பை­யும் ஏற்­ப­டுத்த வேண்­டும்’ என கணக்கு போடுகி­ றார்.

“தான் வந்த பிறகு ஒவ்­வொரு நாளும் அர­சி­ய­லில் அதி­ரடி மாற்­றங்­கள் நிகழவேண்­டும் என விரும்­பு­கி­றார் சசிகலா.

“அதற்­கா­கத்­தான் அவர் சிறை யிலிருந்து வெளியே வரு­வது தள்­ளிப்­போ­கிறது. விடுதலையாகி வெளியே செல்ல அரசு தரப்பில் அவ­ருக்கு பச்­சைக்­கொடி காட்­டப்­பட்­டு­விட்­டது. அப­ரா­தத் தொகை­

ரூ.10 கோடியை செலுத்­திய சில தினங்­களில் அவர் வெளியே வந்­து­வி­டு­வார்,” என சசி­கலா வட்­டா­ரத்­தில் உள்­ள­வர்­கள் கூறி­ய­தாக வார ஏடு தெரி­வித்­துள்­ளது.

விடுதலைக்கு தகுதிபெற்றும் அரசியல் கனவுகளை முடக்கிய கொரோனா அச்சம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon