காளை­யார்­கோ­வில்: ராணுவ வீரரின் தாய், மனைவி கொலை

2 mins read
14c958d5-d525-4f79-ba90-24b67e76e99a
ராணுவ வீரர் ஸ்டீ­பனின் தாயார் ராஜ­குமாரி, 61 மற்­றும் மனைவி சிநேகா, 30. படங்கள்: ஊடகம் -

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டம் காளை­யார்­கோ­வில் அருகே முடுக்­கூ­ர­ணி­யைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீ­பன், 32. தற்­போது சீனா­வு­டன் எல்லைப் பிரச்­சினை நடந்து வரும் லடாக் பகு­தி­யில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

இவ­ரது தந்தை சந்­தி­யாகு, 66, ஓய்­வு­பெற்ற ராணுவ வீரர். தாயார் ராஜ­குமாரி, 61 மற்­றும் மனைவி சிநேகா, 30. இம்­மூ­வ­ரும் ஸ்டீ­பன்-சிநே­கா­வின் ஏழு மாதக் குழந்­தை­யும் சொந்த ஊரில் வசித்து வந்­த­னர்.

சந்­தி­யாகு நேற்று முன்­தி­னம் இரவு அரு­கில் உள்ள தோட்­டத்­திற்­குச் சென்­று­விட்­டார். வீட்­டிற்­குள் சினே­கா­வும் குழந்­தை­யும் தூங்­கி­னர். வாயிற்­பு­றத்­தில் ராஜ­கு­மாரி தூங்­கி­னார். கதவை வெளிப்­பு­ற­மாக பூட்டி சாவி­யைத் தலை­யணை அடி­யில் அவர் வைத்­தி­ருந்­தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ராஜகுமாரியை இரும்புக் கம்பியால் தாக்கியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

சாவியை எடுத்து கத­வைத் திறந்து உள்ளே சென்ற கொள்­ளை­யர்­கள் சினே­காவை படுக்­கை­யி­லேயே கம்­பி­யால் தாக்­கிக் கொன்­ற­னர். ஆனால் குழந்தை யை எது­வும் செய்­ய­வில்லை. இறந்­த­வர்­கள் அணிந்­தி­ருந்த நகை­கள், பீரோ­வில் இருந்த நகை­கள் என 75 பவுன் நகை­கள் மற்­றும் பணத்தை கொள்­ளை­ய­டித்த அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­னர். இரண்டு சட­லங்­க­ளுக்கு இடை­யில் குழந்தை அழ ஆரம்­பித்­தது. விடி­யும் வரை நீண்ட நேரம் அழுத குர­லைக் கேட்டு அக்­கம்­பக்­கத்­தி­னர் ஓடிச் சென்று பார்த்­த­னர்.

இரு பெண்­கள் கொலை செய்­யப்­பட்டு நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது தெரிய வந்­தது. உட­ன­டி­யாக போலி­சுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­ட­தும் மோப்ப நாயு­டன் அதி­கா­ரி­கள் விரைந்து சென்­ற­னர். கைரேகை நிபு­ணர்­கள் தட­யங்­களை சேக­ரித்­த­னர். காளை­யார்­கோ­வில் போலி­சார் வழக்­குப் பதிவு செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர். கொள்­ளை­யர்­க­ளைப் பிடிக்க ஐந்து தனிப்­

ப­டை­கள் அமைக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் சில ஆதா­ரங்கள் சிக்கி இருப்­ப­தா­க­வும் சிவ­கங்கை மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் வருண்­கு­மார் கூறி­னார்.