தங்க கடத்தலில் சிக்கிய மர்ம பை

தீவிரவாதத் தொடர்பு என்பதால் கேரள அரசுக்கு சிக்கல்

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள அர­சாங்­கத்தை சிக்­க­லில் தவிக்க விட்­டி­ருக்­கும் தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் அடுத்­த­டுத்த திருப்­பங்­கள் நிகழ்ந்து வரு­கின்­றன.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அரபு சிற்­ற­ரசுகள் (யுஏஇ) தூத­ர­கத்­தின் பெயரை பயன்­ப­டுத்தி 15 கோடி ரூபாய் மதிப்­புள்ள 30 கிலோ தங்­கம் கடத்த முயன்­றது அண்­மை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இவ்­வி­வ­கா­ரத்­தில் தேடப்­பட்டு வந்த ஸ்வப்னா, சந்­தீப் நாயர் ஆகி­யோர் பெங்­க­ளூ­ரில் கைது செய்­யப்­பட்டு கொச்சி தேசிய குற்­றப் புல­னாய்வு முகவை (என்­ஐஏ) நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இரு­வ­ரை­யும் ஏழு நாள்­கள் என்­ஐஏ கட்­டுப்­பாட்­டில் விசா­ரணை நடத்த நீதி­மன்­றம் அனு­மதி அளித்­துள்­ளது.

முன்­ன­தாக என்­ஐஏ தாக்­கல் செய்த மனு­வில், “இவர்­கள் தங்­கம் கடத்­தி­யது நகைகளுக்காக அல்ல. தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பண உதவி செய்­வ­தற்­கா­கத்­தான்,” எனக் கூறி­யுள்­ளது. மேலும், “யுஏஇ தூத­ர­கத்­தின் முத்­தி­ரையை­யும் சின்­னத்தையும் போலி­யா­கத் தயா­ரித்து, பயன்­ப­டுத்­தித்­தான் இவர்­கள் தங்­கம் கடத்­தி­யுள்­ள­னர்,” என என்­ஐஏ கூறி­யுள்­ளது.

பெங்­க­ளூ­ரில் சந்­தீப் நாயரை கைது செய்­த­போது அவ­ரி­ட­

மி­ருந்து ஒரு கைப்­பையை என்ஐஏ அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

அதனை அதி­கா­ரி­கள் திறந்து பார்க்­க­வில்லை. தங்­கம் கடத்­தல் சம்­பந்­த­மான முக்­கிய ஆவ­ணங்­கள் அந்­தப் பையில் இருக்க வாய்ப்பு உள்­ள­தால் நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­க­ளின் முன்­னி­லை­யில் அத­னைத் திறக்­க­வேண்­டும் என என்­ஐஏ கோரிக்கை விடுத்­துள்­ளது.

தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்­கும் தொடர்­புள்­ள­தாக புகார்­கள் எழுந்­துள்­ள­தைத் தொடர்ந்து அவ­ரது அர­சின் மீது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை சட்­ட­ச­பை­யில் தாக்­கல் செய்ய காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி முடிவு செய்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!