இந்தியாவில் ஒரே நாளில் 30,142 பேருக்கு கொவிட்-19; பிரேசிலை பின்னுக்குத் தள்ளியது

இந்தியாவில் சாதனை அளவாக நேற்று 30,142 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இன்று காலை நிலவரப்படி அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,36,994.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தொடர்ந்து கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கிருமித்தொற்று இரண்டாமிடத்தில் இருந்த பிரேசிலில் கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறைந்து வருகிறது. அதனையடுத்து, தினசரி கிருமித்தொற்று பதிவில் இந்தியா பிரேசிலை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் 150,935 பேரும் தமிழகத்தில் 48,199 பேரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 311,565 பேர் சிகிச்சை பெறுகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சக சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் 86 விழுக்காட்டினர் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், டெல்லி, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத், அசாம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவிலும் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 571,459. இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட 1.8 மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!