வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த அழைப்பு

வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த அழைப்பு

1 mins read
107c8160-391e-4856-be3e-08ebcae8e411
பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினார். படம்: இந்திய ஊடகம் -

புதுடெல்லி: ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இத்திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக உரையாற்றினார்.

"உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா கிருமித்தொற்று பரவி உள்ள இந்த நேரத்தில், வேலை கலாசாரத்துடன் வேலையின் தன்மையும் மாறிவிட்டது. எப்போதும் மாறிவரும் புதிய தொழில்நுட்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.

"ஆனால் மாறிவரும் காலங்களில் இளைஞர்கள் புதிய திறன்களைப் பெறுகின்றனர்.

"திறன் என்பது நாம் நமக்கு நாமே கொடுக்கும் பரிசு, அது அனுபவத்துடன் வளர்கிறது. திறன் தனித்துவமானது. இது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்து கிறது.

"வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். வேலை வாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

"இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்

படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது.

வேலை மட்டுமின்றி செல்வாக்கு ஊக்கத்தையும் திறன் வழங்குகிறது," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.