அசாம் வெள்ளத்தில் 59 பேர் உயிரிழப்பு; பலருக்குப் பாதிப்பு

அசாம் வெள்ளத்தில் 59 பேர் உயிரிழப்பு; பலருக்குப் பாதிப்பு

1 mins read
e27563a7-ff41-4691-a668-0afc256f610d
நோய்வாய்ப்பட்ட மூதாட்டி ஒருவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மீட்கும் மீட்புப் பணியாளர்கள். படம்: இபிஏ -

கவுகாத்தி: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையே, அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

அங்குள்ள 23 மாவட்டங்களில் உள்ள 33 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.