லடாக்: இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட போர்ப் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் பலனாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக திரும்பப் பெற்று வரும் நிலையில் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றுக் காலை லடாக் சென்று இரு நாள் பயணத்தைத் தொடங்கினார். ெடல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்ற அவருடன் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே ஆகியோரும் சென்றனர்.
ராஜ்நாத் சிங்கின் இரு நாள் வருகையின் முதல் நாளான நேற்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் அவர் இன்று சனிக்கிழமை ஆய்வு செய்கிறார். இம் மாதம் 3ஆம் தேதி ராஜ்நாத் மேற்கொள்ள வேண்டிய இந்தப் பயணம் தள்ளி போடப்பட்டது.

