மகாராஷ்டிராவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு: பலி எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் அங்கு புதிதாக 8,541 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.

நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சுமார் 1.58 லட்சம் பேர் கொவிட்-19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,194 பேர் பலியாகி உள்ளனர்.

கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் மும்பையில் உள்ள தாராவி குடிசைப் பகுதியில் கிருமித் தொற்றுப் பரவல் கட்டுக்குள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.18 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் இதுவரை 3,545 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 98 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 45 ஆயிரமாக அதிகரித்த நிலையில் 2,089 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 1,046 பேரைப் பலி வாங்கியுள்ள கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 43 ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது. தெலுங்கானாவில் 41 ஆயிரம் பேரும் ஆந்திராவில் 38 ஆயிரம் பேரும் மேற்கு வங்கத்தில் 36 ஆயிரம் பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் இந்த எண்ணிக்கை 27 ஆயிரமாகவும் அரியானாவில் 24 ஆயிரமாகவும் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!