இளம் வர்த்தகத் தலைவர் கொலை; உதவியாளர் கைது

1 mins read
ac43100a-8914-4a26-9c8c-f33dc82b2632
-

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இளம் தலைமை நிர்வாக அதிகாரி ஃபாஹிம் சாலேயின் கொலையின் தொடர்பில் அவரது 21 வயது உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க போலிசார் தெரிவித்துள்ளனர்.

33 வயது சாலோயை மென்ஹேட்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பல்லாயிர கணக்கான டாலர் பணத்திற்காக அவரைக் கொன்றதாக டைரிஸ் டெவான் ஹஸ்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். திரு சாலேயிடம் டைரிஸ் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அட்வென்ச்சர்ஸ் கெப்பிட்டல் என்ற நிறுவனத்தை நிறுவிய பங்காளியான திரு சாலே, துடிப்பான, கற்பனைத் திறன் வாய்ந்த வர்த்தகர் என்று பேசப்படுவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.