100 மணி நேரத்தில் 1 மில்லியன் பேருக்கு கிருமி தொற்றியது

100 மணி நேரத்தில் 1 மில்லியன் பேருக்கு கிருமி தொற்றியது

1 mins read
e5954598-8ecc-4f88-a483-842203768bfb
-

நூறு மணி நேரத்தில் 1 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறை. இத்துடன் உலகளவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14 மில்லியனைத் தாண்டிவிட்டது. ஜனவரியில் சீனாவின் முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானதை அடுத்து தொற்று எண்ணிக்கை 1 மில்லியனை எட்ட மூன்று மாதங்கள் ஆனது. ஜூலை 13ல் பதிவான 13 மில்லியன் தொற்று நான்கே நாட்களில் 14 மில்லியனாக அதிகரித்தது.

அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வியாழக்கிழமையன்று மட்டும் 77,000க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகின. தொற்று தொடங்கியது முதல் அந்நாட்டில் குறைந்தது 77,281 சம்பவங்கள் பதிவாகின. சில நாடுகளில் முடக்கநிலை நடவடிக்கைகள் மெல்ல தளர்த்தப்படுகின்றன. பார்சிலோனா, மெல்பர்ன் நகரங்கள் மீண்டும் முடக்கநிலை அறிவித்துள்ளன. கிருமித்தொற்றால் ஏழு மாதங்களில் 590,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.

உலகளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிலும் பலியானவர்களிலும் கிட்டத்தட்ட பாதி பேர் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

பிரேசிலில் இந்நோயால் பாதிக்கப்பட்டோர் சுமார் இரண்டு மில்லியன். 76,000 பேருக்கு அதிகமான நோயாளிகள் அங்கு உயிரிழந்துவிட்டனர். பிரேசிலைத் தவிர, ஒரு மில்லியன் நோயாளிகளுக்கும் அதிகமானோர் உள்ள ஒரே நாடு, இந்தியா. கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் புதிதாக 30,000 புதிய தொற்று அறிவிக்கப்பட்டன.