கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: அனைத்துலக போலிஸ் தலையிட்டது

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: அனைத்துலக போலிஸ் தலையிட்டது

1 mins read
617e8a7c-daf1-461e-85c8-e7c03a8a6fc2
கேர­ளாவை உலுக்கி வரும் 30 கிலோ தங்­கக் கடத்­தல் வழக்­கில் சரித், ஸ்வப்னா சுரேஷ் (படம்), ஃபைசல் ஃபரீத், சந்­திப் நாயர் ஆகி­யோர் மீது தேசிய புல­னாய்வு முகவை (என்­ஐஏ) வழக்­குப்­ப­திவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. கோப்புப்படம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள தங்க கடத்­தல் வழக்­கில் துபா­யில் பதுங்­கி­யுள்ள ஃபைசல் ஃபரீத்­திற்கு எதி­ராக அனைத்­து­லக போலிஸ் (இண்­டர்­போல்) 'லுக்­அ­வுட் நோட்­டீஸ்' பிறப்­பித்து உள்­ளது. முன்­ன­தாக அவ­ரது பாஸ்போர்ட்டை மத்­திய அரசு ரத்து செய்­து­விட்­டது.

துபா­யை­விட்டு வேறு எங்­கும் செல்­லா­த­வாறு அந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. தற்­போது அனைத்­து­லக போலி­சின் தேடு­தல் அறி­விப்பு கார­ண­மாக விரை­வில் ஃபைசல் கைது செய்­யப்­பட்டு இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வார் என்று நம்­பப்­ப­டு­கிறது.

கேர­ளாவை உலுக்கி வரும் 30 கிலோ தங்­கக் கடத்­தல் வழக்­கில் சரித், ஸ்வப்னா சுரேஷ், ஃபைசல் ஃபரீத், சந்­திப் நாயர் ஆகி­யோர் மீது தேசிய புல­னாய்வு முகவை (என்­ஐஏ) வழக்­குப்­ப­திவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.