30 கொலைகளில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய துங்கா

30 கொலைகளில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய துங்கா

1 mins read
bdfa4993-2276-414f-a17c-2b5aa1fbebeb
பாராட்டு மழையில் நனைந்த துப்பறியும் நாய் துங்கா. படம்: ஊடகம் -

தாவன்­கெரே: கர்­நா­டக போலிஸ் படை­யில் இடம்­பெற்­றுள்ள துப்­ப­றி­யும் நாயின் துப்பறியும் திற­னைப் பாராட்டி விழா நடத்தப்­பட்­டது. அந்த ஒன்­பது வயது நாயின் பெயர் துங்கா.

பிறந்த குட்­டி­யாக போலிஸ் படை­யில் சேர்க்­கப்­பட்ட துங்கா இந்த ஒன்­பது ஆண்­டு­களில் 30 கொலை­கள் உள்­ளிட்ட 60 வழக்­கு­களில் குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்­கப் பேரு­தவி புரிந்­த­தாக கர்­நா­டக மாநில துணைத் தலைமை போலிஸ் அதி­காரி டாக்­டர் அமர் குமார் பாண்டே தெரி­வித்­தார்.

இவற்­றுள் 25 திருட்­டுச் சம்­ப­வங்­கள் 5 கூட்­டுக்­கொள்ளை மற்­றும் வழிப்­பறி சம்­ப­வங்­கள் ஆகி­ய­ன­வும் அடங்­கும்.

குறிப்­பாக அண்­மை­யில் சந்­தே­பென்­னூர் போலிஸ் கட்­டுப்­பாட்டு எல்­லைக்­குட்­பட்ட சாந்­தி­சா­கர் ஹில்ஸ் பகு­தி­யில் நடை­பெற்ற படு­கொ­லை­யில் மர்­மம் நீடித்­தது.

துங்­காவை ஈடுபடுத்தியபோது பல கிரா­மங்­கள் வழி­யாக மூன்றே முக்கால் மணி நேரம் 11 கிலோ மீட்­டர் தூரம் ஓடி குற்­ற­வா­ளி­யின் தட­யத்­தைக் கண்­ட­றிந்­தது. அதன் மூலம் துப்பு துலங்­கி­ய­தால் போலி­சார் நிம்­ம­திப் பெரு­மூச்சுவிட்­ட­னர்.