'இந்தியாவில் சமூகப்பரவல் தொடங்கியது'

'இந்தியாவில் சமூகப்பரவல் தொடங்கியது'

1 mins read
237e7af6-0420-4105-8367-023b04fac5d4
மும்பையில் குடியிருப்புப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கொவிட்-19 சோதனைக்குத் தேவையான சளி மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர் நலத்துறை ஊழியர்கள். படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 சமூ­கப் பர­வ­லா­கி­யுள்­ளது. அத­னால்­தான் எண்­ணிக்கை நாள்தோறும் அதி­க­ரித்­து வருகிறது என இந்­திய மருத்­து­வக் கூட்­ட­மைப்பு அமைப்பு (ஐஎம்ஏ) தெரி­வித்­துள்­ளது. நக­ரங்­களை ஆக்கிரமித்த தொற்று இப்­போது சிறு நகரங்களிலும் கிரா­மப்­புறங்­க­ளி­லும் பர­வத் தொடங்­கி­யுள்ளது. இப்­ப­டியே சென்­றால் தொற்றைக் கட்­டுப்­படுத்­து­வது கடி­ன­மா­ன­தாக மாறி­வி­டும்.

இது தொடர்­பாக கருத்துத் தெரி­வித்­துள்ள இந்­திய மருத்­துவச் சங்­கத்­தின் தலை­வர் வி.கே. மோங்கோ, கொரோ­னா­வால் தின­மும் பாதிக்­கப்­ப­டு­பவர்­க­ளின் எண்­ணிக்கை 30,000 தாண்டி பதி­வாகி வரு­வ­தா­க­வும், இது மிக­வும் மோச­மான நிலை என்­றும் வேதனை தெரி­வித்­தார். ஒட்­டு­மொத்த பாதிப்பு 10 லட்­சத்து 77 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தொற்­றுப்­பர­வ­லால் நாடு மிக­வும் மோச­மான சூழ்­நிலையை எதிர்­நோக்­கு­வ­தாக திரு மோங்கோ எச்சரித்துள்ளார்.

டெல்­லி­யில் நோய்த்தொற்றைக் கட்­டுப்­படுத்த முடிந்­தது. ஆனால், மகா­ராஷ்­டிரா, தமிழ்நாடு, கர்­நா­டகா, கேரளா, கோவா, மத்­தி­யப்­பி­ர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளின் உள்­மா­வட்­டங்­கள், கிரா­மங்­களில் கட்­டுப்­படுத்த முடியவில்லை. இப்­போது பல நக­ரங்­கள் புதி­தாக ஹாட்ஸ்­பாட் பகு­தி­க­ளாக மாறி வரு­கின்­றன. மாநில அர­சு­கள் முழு விழிப்­பு­டன் இருந்து தடுப்பு நட­வ­டிக்­கை­களை முடுக்கிவிட வேண்­டும். இதைக் கட்டுப்படுத்த இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது, 70% மக்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி, இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டுவருவது, இரண்டாவது தடுப்பூசி போடுவதாகும் என்று மோங்கா தெரிவித்தார்.