உ.பி: பேருந்தும் காரும் மோதியதில் 6 பேர் பலி; 40 பேர் படுகாயம்

உ.பி: பேருந்தும் காரும் மோதியதில் 6 பேர் பலி; 40 பேர் படுகாயம்

1 mins read
33f94fc1-1c7b-4ca6-8e39-6a6568dd4669
-

லக்னோ: புது­டெல்­லி­யில் இருந்து பீகார் நோக்கி தனி­யார் பேருந்து ஒன்று சென்றுகொண்­டி­ருந்­தது. நேற்று அதி­காலை ஐந்து மணி அள­வில் அந்­தப் பேருந்து உத்­தரப் பிர­தேச மாநி­லத்­தில் உள்ள ஆக்ரா - லக்னோ விரை­வுச் சாலை­யில் சென்று கொண்­டி­ருந்­த­போது, கண்­ணி­மைக்­கும் நேரத்­திற்­குள் முந்­திச்­சென்ற கார் மீது மோதி­யது.

மோதிய வேகத்­தில் பேருந்­தும் காரும் விரை­வுச்­சா­லைக்கு ஓர­மாக இருந்த பள்­ளத்­தில் கவிழ்ந்­தன.

இந்த விபத்­தில் 6 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். 40 பேர் படு­கா­யம் அடைந்­த­னர். காய­ம­டைந்­த­வர்­கள் கண்­ணுஜ் மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தனது வருத்­தத்தைத் தெரி­வித்­துள்ள உத்­தரப் பிர­தேச மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளுக்கு அனைத்து வச­தி­களை­யும் வழங்க மாவட்ட அதி­காரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.