ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சச்சின் பதவி விலகினார்.
சச்சின் பதவி விலகல் பாஜக சார்பில் நடத்தப்படும் குதிரைப்பேரம் என்று அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலிசார் சஞ்சங் ஜெய்ன் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எதிர்ப்பு எம்.எல்.ஏ. பன்வார்லால் ஷர்மா, பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்குடன் ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்துப் பேசியதாக ஒலிநாடா ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க 8 சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை ராஜஸ்தான் மாநில அரசு அமைத்துள்ளது.

