மின்கட்டண வசூல்: அதிகாரிகளைக் கட்டி வைத்த மக்கள்

மின்கட்டண வசூல்: அதிகாரிகளைக் கட்டி வைத்த மக்கள்

1 mins read
d5cecf5f-3d08-4cc6-b1bf-3a0d1c605db4
-

ஹைத­ரா­பாத்: கொரோனா ஊர­டங்கு காலத்­தில் மின்­சா­ரக்­கட்­ட­ணத்தை கணக்­கி­டு­வ­தி­லும், கட்­ட­ணத்தை வசூ­லிப்­ப­தி­லும் நாடு முழு­வ­தும் மின்துறை­யில் குழப்­ப­மான சூழல் நிலவி வரு­கிறது.

மேலும், மின் கட்­ட­ணம் மிக­வும் அதி­க­மாக வசூ­லிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன. இத­னால் சில சம­யங்­களில் மின்­வா­ரி­யத்­துறை ஊழி­யர்­க­ளுக்­கும், பொது­மக்­க­ளுக்­கும் இடையே கருத்து மோதல்­கள் நிகழ்ந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தெலுங்­கானா மாநி­லம் மேடக் மாவட்­டத்தை சேர்ந்த மின்­வா­ரி­யத்­துறை அதி­கா­ரி­கள் இரு­வர் தங்­கள் பணி எல்­லைக்கு உள்­பட்ட அல­துர்­கம் என்ற கிரா­மத்­தில் கணக்­கி­டப்­பட்ட மின் கட்­ட­ணத்தை வசூ­லிக்­கச் சென்­ற­னர்.

அந்த கிராம மக்­க­ளி­டம் மின் கட்­ட­ணத்தை உட­ன­டி­யாக செலுத்­தும்­படி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இத­னால் கிராம மக்­களில் சில­ருக்­கும் மின்­வா­ரி­யத்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் இடையே வாக்கு­வா­தம் ஏற்­பட்­டது. வாக்­கு­வா­தம் முற்­றிய நிலை­யில் ஆத்­தி­ர­ம­டைந்த கிராம மக்­கள் மின் கட்­ட­ணம் வசூ­லிக்க வந்த மின் வாரி­யத்­துறை அதி­கா­ரி­கள் இரு­வ­ரை­யும் அங்கு இருந்த மின் கம்­பத்­தில் கட்டி வைத்­த­னர்.

இது­கு­றித்து தக­வ­ல­றிந்த காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­திற்குச் சென்று அதி­கா­ரி­களை மீட்­டனர். மேலும், இது குறித்து மின்­வா­ரி­யத்­துறை அதி­கா­ரி­கள் கொடுத்த புகா­ரை அ­டுத்து அந்தக் கிரா­மத்­தைச் சேர்ந்த 5 பேர் மீது போலிசார் வழக்­குப்­ப­திவு செய்து அவர்­களை கைது செய்தனர்.