திருப்பதியில் கொரோனாவுக்கு செய்தியாளர் பலி

திருப்பதியில் கொரோனாவுக்கு செய்தியாளர் பலி

1 mins read
a5aa0200-a104-4aaf-9b8a-3963e30829fa
ஆந்திராவின் செகந்தராபாத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பட்டுள்ள அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 சோதனை மையத்தில் வருகையாளர்களை பாதுகுாப்பாக நிற்க வைக்கிறார் நலத்துறை ஊழியர் ஒருவர். படம்: ஏஎப்பி -

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் தமிழ் தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் சுப்பிரமணி கடந்த நான்கு ஆண்டுகளாக செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் சுப்பிரமணிக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்றுச் சோதனையில் அவருக்குத் தொற்று பீடித்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பதியில் உள்ள கொவிட்-19 சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று மாலை மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் களப்பணியில் ஈடுபட்டு வரும் ஏராளமான செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.