தள்ளுவண்டியில் சென்ற சடலம்

1 mins read
e5fb0137-8110-4ab8-becb-c0df21a1394f
-

பெங்களூரு: கொரோனா கிருமித்தொற்று பீதி காரணமாக யாரும் உதவ முன்வராத நிலையில், மாரடைப்பால் இறந்த தனது கணவரின் சடலத்தை தள்ளுவண்டியில் வைத்து இடுகாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார் மனைவி. கர்நாடகாவைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான 55 வயது சாதஷிவ் ரெட்டி கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.சாதஷிவ் கொவிட்-19 நோய் தாக்கத்தால் இறந்ததாக அவர் வசித்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் இறுதிச்சடங்கில் பங்கேற்கவோ உதவி செய்யவோ யாரும் முன்வரவில்லை. இதனால் மனைவி அக்கம்மா, கணவரது உடலை வெள்ளை நிற சாக்குப்பையில் வைத்து கட்டி, தள்ளுவண்டியில் வைத்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள இடுகாட்டுக்கு தள்ளிச் சென்றார். இது தொடர்பான காணொளிப்பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.