சென்னை: நடிகை குஷ்பு அண்மைக்காலமாக நடிகர் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாக தமிழக காங்கிரசில் ஒருபிரிவினர் புகார் எழுப்பியுள்ளனர். அவரைக் கட்சியில் இருந்து நீக்கக்கோரி காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிருப்தியாளர்கள் மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருவதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட குஷ்பு விரும்புவதாகவும் அதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே சிலர் இவ்வாறு புகார் எழுப்பி வருவதாகவும் குஷ்பு ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷ்புவுக்கு எதிராக தமிழக காங்கிரசார் கட்சித் தலைமையிடம் புகார்
1 mins read
-

